Doggy Holiday: புல்லட் ரயிலில் நாய்களும் பயணிக்கலாம்: இது ஜப்பானின் சுகாதாரமான ரயில் சேவை

ஜப்பானின் புல்லட் ரயிலில் நாய்கள் ரயில் பயணத்தை அனுபவிக்கின்றன. இந்த முதல் 'நாய் விடுமுறை' சேவையை ஜப்பான் ரயில்வே முன்னெடுத்துள்ளது. இந்த பயணத்தில் பொமரேனியன், டெரியர், ஷிபா இனு என பலவகை நாய்கள் பயணித்தன.

(Photograph:AFP)

 

1 /5

ஜப்பானின் புல்லட் ரயில்களில், நாய்கள் வழக்கமாக ஒரு கேரியரில் பயணிக்க வேண்டும், ஆனால் சனிக்கிழமையன்று (2022, மே 21) நாய்கள் வழக்கமான பயணிகளுடன் பயணித்தன.   டோக்கியோவில் உள்ள Ueno நிலையத்தில், பயணிகள் தங்கள் உரிமையாளர்களுடன் ரிசார்ட் நகரமான கருயிசாவாவிற்கு ஒரு மணி நேர பயணம் மேற்கொண்டனர்.  (Photograph:AFP)

2 /5

ஜப்பான் இரயில்வேயால் நடத்தப்பட்ட முதல் "நாய் விடுமுறை" சேவை இது (Photograph:AFP)

3 /5

பொதுவான ஷிங்கன்சென் ரயிலில் செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அவை ஒரு ஹோல்டருக்குள் வைக்கப்பட வேண்டும், மேலும் கூண்டு உட்பட அவற்றின் மொத்த எடை 10 கிலோகிராம்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது வழக்கமான விதிமுறை. (Photograph:AFP)

4 /5

எதிர்காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற உல்லாசப் பயணங்களை ஒழுங்கமைக்க திட்டமிடுகிறது ஜப்பான் (Photograph:AFP)

5 /5

ஜப்பானிய ரயில்கள் சுத்தமாக இருப்பதற்காகப் புகழ் பெற்றவை, எனவே, ரயிலில் குறைபாடற்ற தரத்தை பராமரிப்பதே மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். பணியாளர்கள் அனைத்து இருக்கைகளிலும் பிளாஸ்டிக் கவர்களை வைத்து, நான்கு ஏர் பியூரிஃபையர்களை கொண்டு வந்தனர், இது பயணத்திற்குப் பிறகு ரயிலில் விழுந்திருக்கும் நாய் முடிகள் அனைத்தையும் அகற்றுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சவாலான பணியாகும்.   (Photograph:AFP)