ஏசி போட்டால் கார் மைலேஜ் பாதிக்குமா? - தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் வெளியில் சுட்டெரிக்கும் நிலையில் ஏசி போட்டால் காரில் மைலேஜ் குறையுமா? என்பதை தெரிந்து கொள்வோம்.

 

1 /7

இந்தியாவில் பல பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிட்டது. தற்போதே பல இடங்களில் கோடைக் காலம் போல வெளியில் அடிக்கடிக்கிறது. வெயில் காலங்களில் கார்களில் செல்பவர்கள் அதிகமாக ஏசியை பயன்படுத்துவார்கள். ஏசி இல்லை என்றால் காரில் செல்லவே முடியாத நிலை இருக்கும்.  

2 /7

காற்றும் அனல் காற்றாக இருக்கும் என்பதால் பலர் கார்களில் செல்லும் போது ஜன்னலை மூடிக்கொண்டு ஏசியை ஆன் செய்து முழு ஸ்பீடில் வைத்துக்கொண்டு பயணிப்பார்கள். அப்பொழுது தான் இந்த வெப்பத்திற்கு இதமாக இருக்கும். என்னதான் மக்கள் அதிக காலம் கார் ஓட்டியிருந்தாலும் அவர்களுக்கு வெகு நாட்களாகத் தீராத சில சந்தேகங்கள் இருக்கின்றன.  

3 /7

கார்களில் ஏசிப் போட்டுப் பயணித்தால் காரின் மைலேஜ் குறையுமா?, அதிக மைலேஜ் கிடைக்க ஏசியை ஆஃப் செய்து ஓட்ட வேண்டுமா?, ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணித்தால் மைலேஜ் பாதிக்கும் எனச் சொல்லப்படுவது உண்மையா? என பல ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்காத கேள்விகளாக இருக்கின்றன.  

4 /7

முதலில் ஏசியை பயன்படுத்தினால் மைலேஜ் குறையும் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் காணலாம். ஆம் அது உண்மை தான் நீங்கள் காரில் செல்லும் போது ஏசியை ஆன் செய்தால் நிச்சயம் மைலேஜ் பாதிக்கப்படும். ஏசி கம்பிரஷர் இயங்குவதற்கு இன்ஜினிலிருந்து தான் பவரை எடுக்கிறது. அதனால் இன்ஜின் பவர் காருக்கு செல்வது குறையும். இதனால் மைலேஜ் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்.  

5 /7

ஆனால் ஏசி எவ்வளவு இன்ஜின் திறனை எடுக்கிறது என்பது ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாறுபடும். வெளிப்புற வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், காருக்குள் நீங்கள் செட் செய்திருக்கும் வெப்ப நிலை ஆகியவற்றை வைத்து எவ்வளவு இன்ஜின் திறனை பயன்படுத்துகிறது என்பது மாறும் அதற்கு ஏற்றார் போல் மைலேஜூம் மாறுபடும்.  

6 /7

வெயிலில் நீண்ட தூரம் செல்லும் போது ஜன்னலை மூடி வைத்திருந்தால் காருக்குள் வெப்பம் அதிகமாகிவிடும். அதனால் ஏசியை பயன்படுத்துவது தான் நல்லது.  

7 /7

அதிகமாக ஏசியை ஆஃப் செய்துவிட்டால் காருக்குள் வெப்பம் அதிகமாகும். மீண்டும் ஆன் செய்யும் போது வெப்பத்தைக் குறைக்க ஏசி அதிக திறனில் இயங்க வேண்டும். இதனால் மைலேஜ் மேலும் குறையும். ஒரு முறை ஏசியை ஆன் செய்ய முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் பயணம் முடியும் வரை ஆப் செய்யாதீர்கள்.