Royal Enfield Sales In April 2024: ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவு விற்பனை ஆகி உள்ளது என்ற விவரம் வெளிவந்து. அந்த வகையில், இந்தியாவில் எந்த மாடல் பைக் அனைவராலும் விரும்பப்படுகிறது என்பதை இதில் காணலாம்.
ராயல் என்பீல்ட் நிறுவனம் என்பது அனைவராலும் விரும்பப்படும் இருச்சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாகும். ராயல் என்பீல்ட் பைக்கை வாங்குவதே தங்கள் வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்பதை பலரும் சொல்லி நாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம்.
7. Royal Enfield Super Meteor: இந்த மாடல் பைக் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,139 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு வெறும் 973 யூனிட்களே விற்பனையாகி உள்ளது. அதாவது கடந்தாண்டை விட 166 பைக்குகள் குறைவாக விற்பனையாகி உள்ளது. இந்தாண்டு மார்ச் மாதம் வெறும் 218 பைக்குகளே விற்பனையான நிலையில், ஒரு மாதத்தில் மட்டும் 755 பைக்குகள் அதிகமாக விற்பனையாகி உள்ளது.
6. Royal Enfield 650 Twins: இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த மாடல் 2,189 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1,865 யூனிட்களே விற்பனையானது. அதாவது இந்தாண்டு ஏப்ரலில் சுமார் 324 பைக்குகள் கடந்தாண்டை விட அதிகமாக விற்பனயாகி உள்ளது. அதே, இந்தாண்டு மார்ச் மாத விற்பனையோடு ஒப்பிட்டால் ஏப்ரலில் இந்த மாடல் சற்றே அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதாவது மார்ச் மாதத்தில் 2,175 யூனிட்கள் விற்பனையான நிலையில் 2,189 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
5. Royal Enfield Himalayan: கடந்தாண்டை விட மிகவும் குறைவாக விற்பனையான மாடல் என்றால் அது இதுதான். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 3,251 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு ஏப்ரலில் 2,917 யூனிட்களே விற்பனையாகி உள்ளது. அதாவது கடந்தாண்டு ஏப்ரல் விற்பனையை விட 604 யூனிட்கள் இந்தாண்டு குறைவாகும். ஆனால், கடந்த மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் விற்பனை அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 2,216 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஏப்ரலில் 701 யூனிட்கள் அதிகரித்துள்ளது.
4. Royal Enfield Meteor 350: இந்த மாடல் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 10,132 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தை விட 2,534 யூனிட்கள் அதிகம். கடந்தாண்டு வெறும் 7,598 யூனிட்களே விற்பனையானது. அதேபோல் இந்தாண்டு மார்ச் மாதத்தில் 8,963 யூனிட்களே விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் 1,169 யூனிட்கள் உயர்ந்திருக்கிறது.
3. Royal Enfield Bullet 350: இந்த மாடல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 13,165 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் 12 ஆயிரத்து 178 யூனிட்கள் விற்பனையாகி, 987 பைக்குள் கடந்தாண்டை விட அதிகமாகி உள்ளது. இதே மாடல் கடந்த மார்ச் மாதத்தில் 11,262 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது ஒரு மாதத்தில் 1,903 யூனிட்கள் அதிகரித்திருக்கிறது.
2. Royal Enfield Hunter 350: இந்த மாடல் இந்தாண்டு ஏப்ரலில் 16,186 யூனிட்கள் விற்பனையாகின. கடந்தாண்டு ஏப்ரலில் 15,799 யூனிட்கள் விற்பனையானது. இதே இந்தாண்டு மார்ச் மாதத்தில் 15, 702 யூனிட்கள் விற்பனையானது.
1. Royal Enfield Classic 350: இந்த மாடல் இந்தாண்டு ஏப்ரலில் மட்டும் 29,476 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 26,781 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. அதே இந்தாண்டு மார்ச் மாதத்தில் 25,508 யூனிட்களே விற்பனையாகியது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்ட் பைக்குகள் மொத்தம் 75,038 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதே கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 68,881 யூனிட்களே விற்பனையாகின. இந்தாண்டு 6,157 யூனிட்கள் அதிகமாகியுள்ளது. அதாவது வருடாந்திர வளர்ச்சி 8.94% ஆகும். அதே கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 66,044 யூனிட்களே விற்பனையாகின. ஏப்ரலை பொறுத்தவரை 8,994 யூனிட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. மாதாந்திர வளர்ச்சி 13.62% ஆக உள்ளது.