தாம்பூலம் என்பது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? @நவராத்திரி in pics...

நவராத்திரி இந்துக்களின் முக்கியமான பண்டிகை. ஒன்பது நாட்களும் அன்னையை வீட்டில் வைத்து ஆராதித்து, வீட்டிற்கு வருபவர்களை தெய்வமாக நினைத்து, உபசரிக்கும் பாரம்பரிய பண்டிகை.

நவராத்திரியின்போது வீடுகளுக்கு வரும் பெண்களுக்கு தாம்பூலப் பை கொடுப்பார்கள். அதில் என்னென்ன பொருட்கள் இருக்கும்? அதற்கான காரணம் என்ன? தெரிந்துக் கொள்வோம்...

வெற்றிலை - பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, ரவிக்கைத்துணி என வைத்து நவராத்திரிக்கு வழங்கும் தாம்பூல பையில் இருக்கும்.தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.

1 /6

முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து அனைவருக்கும் அருள்பாலிக்கட்டும்...

2 /6

மஞ்சள், மங்கலகரமானது... மாங்கல்யத்தை தக்க வைப்பது.  தாம்பூலப் பையில் மஞ்சளுக்கு என ஒரு மகிமை உண்டு...

3 /6

மகிழ்ச்சி பெருக மலர் கொடுங்கள்

4 /6

தேங்காய், பழம், பசியாற்றும் அன்னையின்அன்பான உள்ளத்தைவெளிகாட்டும்... 

5 /6

கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக சீப்பும்,  ஆரோக்கியம் காக்க கண்ணாடியும் கொடுக்கப்படுகிறது.

6 /6

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.