ரூ. 34,000 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள இந்திய திரைப்பட தயாரிப்பாளர் யார் தெரியுமா?

2024ல் வெளியான இந்தியா பணக்காரர்கள் பட்டியலின்படி, ஷாருக்கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி ஆகும். அதே சமயம் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.1,600 கோடியாக உள்ளது.

 

1 /6

ஒரு திரைப்படம் உருவாவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒருவர். அவர்களின் சரியான திட்டமிடலில் ஒரு படம் சிறந்த படமாகவும், நல்ல வசூல் பெறவும் உதவுகிறது.  

2 /6

கரண் ஜோஹர் மற்றும் ஆதித்யா சோப்ரா போன்ற மிகப்பெரிய பாலிவுட் தயாரிப்பாளர்கள் இருந்த போதிலும், அவர்களை தாண்டி அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.  

3 /6

தற்போது இந்தியாவின் 80வது பணக்காரராக உள்ளார் சன் குழுமத்தின் நிறுவனம் கலாநிதி மாறன். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 34,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

4 /6

திரைப்படங்களை தாண்டி ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகளை வைத்துள்ளார் கலாநிதி மாறன்.  

5 /6

சென்னையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த கலாநிதி மாறன், 1993ல் சன் டிவியை தொடங்கினார். அது இன்று மிகப்பெரிய சன் குழுமமாக வளர்ந்துள்ளது. தற்போது சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது.  

6 /6

சன் குழுமத்தில் மொத்தம் 30 தொலைக்காட்சி சேனல்கள், 2 செய்தித்தாள்கள், ஐந்து இதழ்கள், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், Sun NXT ஓடிடி, Sun Direct மற்றும் இரண்டு கிரிக்கெட் அணிகள் ஆகியவை உள்ளது.