ஆடைத் தொழிற்சாலையில் புகுந்த வெள்ளம், இந்தோனேசிய கிராமத்தையே குருதிப் புனலாக்கிவிட்டது. மத்திய ஜாவாவில் பெக்கலோங்கன் நகரின் தெற்கே கிராமத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பகிர்ந்து கொண்டனர், சில சமூக ஊடக பயனர்கள் இந்த வெள்ளம் ரத்த வெள்ளமாக காணப்படுவதாக புகைப்படங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர்.
பெக்கலோங்கனில் உள்ள ஆறுகள் வெவ்வேறு வண்ணங்களை மாற்றுக் கொள்கின்றன.
ஜகார்த்தாவின் அருகிலுள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய கிராமமான ஜெங்க்கோட்டில் ஆற்றில் வெள்ளம் பெருகி வெள்ளம் ரத்த ஆறாக தெருக்களில் ஓடியது. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read | Bear Grylls சாகச நிகழ்ச்சிகளில் ரஜினி முதல் மோடி வரை நட்சத்திர பிரபலங்கள்
மத்திய ஜாவாவில் பெக்கலோங்கன் நகரின் தெற்கே கிராமத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பகிர்ந்து கொண்டனர், சில சமூக ஊடக பயனர்க இரத்தத்தை நினைவூட்டியதாகக் கூறினர்.
"இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியிருக்கிறது. இது புரளி பரப்புபவர்களின் மோசமான கைகளில் சிக்கினால் என்ன ஆகும் என்று அச்சமாக இருக்கிறது" என்று ஒரு ட்விட்டர் பயனர் அயா இ அரேக்-அரேக் கவலைப்படுகிறார்.
"இது உலகின் முடிவு என்பதற்கான அறிகுறிகள் என்றும் ரத்த மழை பெய்ததாக சொல்லி மக்களை பயப்படுத்த பயன்படுத்தலாம்".
சாய தொழிற்சாலையில் புகுந்த நீர் வெளியேறும்போது செந்நிறமாக மாறிவிட்டது. பெக்கலோங்கன் ஊரில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு பிரபலமானது.
வழக்கமாக துணி மீது வடிவங்கள் மற்றும் படங்களை சித்தரிக்க மெழுகுடன் கலந்து சாயம் பயன்படுத்துவார்கள். இது இந்தோனேசிய பாரம்பரிய முறையாகும்.
இந்தோனேசிய கிராமத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, அது ரத்தம் போல் சிவப்பு நிறத்தில் இருந்ததால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.