நம்மில் பலரும் டீ பழக்கத்திற்கு அடிமையானவர்கள்தான். அடிமை இல்லை என்றாலும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது டீ குடிக்காதவர்கள் குறைவே. நீங்கள் டீ குடிக்கும்போது அதன் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொண்டு குடிப்பது பலனளிக்கும்.
துளசி டீ, மன அழுத்தத்தை ஊக்குவிக்கும் கார்டிசால் என்னும் ஹார்மோனை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியான நாளை கடத்த துளசி டீ பெரும் பங்காற்றுகிறது.
புதினா டீ, செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. கடுமையான தலைவலியின்போது புதினா டீ குடித்தால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதேபோல, IBS அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய் போன்றவற்றைக்கு தீர்வாகவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் இந்த டீ பங்காற்றுகிறது.
கொத்தமல்லி டீ, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்லி டீ மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ள இந்த டீ உங்கள் சருமத்தை, நச்சுகள் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து விடுபட அனுமதிக்கிறது.
லெமன் டீ, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை சீரான நிலையில் வைத்து கொள்ள உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஈறுகளின் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து எப்பொழுதும் நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.
இஞ்சி டீ, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. இந்த டீயில், அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் புத்துணர்ச்சி தருவதுடன் மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது.