ஆச்சார்யா சாணக்யா ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூலான் அர்த்தசாஸ்திராத்தை எழுதியவர் இவர். கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். சாணக்கியர் தனது கொள்கையில் கணவன் மனைவி உறவைப் பற்றியும் கூறியுள்ளார். சாணக்கியரின் கொள்கைப்படி சில விஷயங்களை யாரிடமும் சொல்லக் கூடாது. அது உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. சாணக்கியரின் நெறிமுறைகளில், இந்த ரகசிய விஷயங்களை மனைவியிடம் கூட கூறக்கூடாது. அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.
சாணக்ய நித்தியின் கூற்றுப்படி, ஒருவர் தனது பலவீனத்தை யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது.
சாணக்கிய நித்தியின் கூற்றுப்படி, நன்கொடையை எவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது.
உங்கள் சம்பாத்தியத்தைப் பற்றிய அனைத்துத் தகவலையும் உங்கள் மனைவியிடம் ஒருபோதும் கொடுக்கக் கூடாது என்கிறார் சாணக்கியர்.