அலட்சியம் வேண்டாம்... கல்லீரல் பாதிப்பின் ‘சில’ ஆபத்தான அறிகுறிகள் இவை தான்!

கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

1 /7

கல்லீரல் சேதமடைவதற்கு முன், உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும். அது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இதற்கான அறிகுறிகளை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில்  ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். சேதமடைவதற்கு முன், உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும். அது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இதற்கான அறிகுறிகளை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில்  ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

2 /7

குமட்டல் அல்லது வாந்தி அடிக்கடி ஏற்படுவது கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று. கல்லீரல பாதிப்பினால், உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாத போது, இந்த குமட்டல் உணர்வை ஏற்படுத்துகிறது. இது பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுடன் சேர்ந்து எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

3 /7

கல்லீரல் சரியாக செயல்படாதபோது, ​​​​கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுவதில்லை. இதன் விளைவாக, பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது. பிலிரூபின் அளவு அதிகரித்தால், தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம் ஏற்படும். எனவே தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறினால், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

4 /7

பாதங்களில் வீக்கம் ஏற்படும் போது சிலர் அலட்சியம் செய்வார்கள். கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கால் வீக்கம் என்பதால், இதுபோன்ற நிலையை அலட்சியம் செய்யாதீர்கள்.

5 /7

உங்கள் சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையெனில் கல்லீரல் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும், ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.

6 /7

நீங்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.