திருமண உறவை சிதைக்கும் இந்த 5 மிகப்பெரிய தவறுகள்... கவனமாக இருங்கள்!

Relationship Tips: காதலித்து திருமணம் செய்தாலும் சரி அல்லது பெற்றோர் மூலம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தாலும் சரி, திருமணத்திற்கு பின் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில், திருமணத்திற்கு பின் இந்த 5 தவறுகளை செய்தால் அது உங்களின் உறவை பலவீனமாக்கும் என கூறப்படுகிறது. 

திருமண உறவில் கடும் பிரச்னையை ஏற்படும் அந்த ஐந்து தவறுகள் குறித்து இங்கு காணலாம்.

1 /7

திருமண உறவில் ஒருவருக்கொருவர் மரியாதை உடனும் நம்பிக்கை உடனும் இருக்க வேண்டும். அந்த வகையில் தனது இணையரை மரியாதை இன்றியும் நம்பிக்கை இன்றியும் அணுக தொடங்கினால் அது உறவை பலவீனமாக்கும். குறிப்பாக மரியாதை குறைவான ஆபாசமான வார்த்தைகளில் வசைப்பாடுதல் பெரிய பிரச்னையை ஏற்படுத்தலாம்.   

2 /7

நிதி விஷயத்தில் புரிதல் இல்லாமல் குளறுபடியில் ஈடுபட்டாலும் அது திருமண உறவை பாதிக்கும். உங்களின் வருமானம், செலவு குறித்து இரு தரப்பிலும் சரியான புரிதலும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். வரவு செலவில் தம்பதிகளிடம் பிரச்னை வருவதே அவர்களின் உறவை சிதைக்கும் முக்கிய காரணியாகும்.     

3 /7

திருமண உறவில் இருக்கும் போது இணையரின் உணர்வை புரிந்துகொள்ளாமலும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் செயல்படுவது உறவை சிதைக்கும். உணர்வுகளை உதாசினப்படுத்துவது பெரிய பிரச்னையை தரும். 

4 /7

ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். சாப்பிடும் நேரம் தொடங்கி பொழுதுபோக்கு உள்ளிட்ட பல விஷயங்களில் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உறவின் மீதான பிடிப்பு இல்லாமல் போய்விடும்.   

5 /7

ஒருவருக்கொருவர் நல்ல தகவல் தொடர்பு இருக்க வேண்டும். எவ்வித ஒளிவுமறைவும் இன்றி உரையாட வேண்டும். அப்படி பேசாமல் தனது உணர்வை இணையருக்கு கடத்தாவிட்டால் பிரச்னை ஏற்படாது.   

6 /7

இந்த 5 பிரச்னைகள் மட்டுமின்றி மாறி மாறி விமர்சனம் மேற்கொள்வது, தீய எண்ணங்களை பரப்புவது, எப்போதும் குறை சொல்வது, பொறுப்பை தட்டிக்கழிப்பது, மற்றொருவருடன் ஒப்பிடுவது, மன்னிப்பெு கேட்க மறுப்பது ஆகியவையும் உறவை சிதைக்கும் பிற தவறுகள் எனலாம்.   

7 /7

இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. திருமண உறவில் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்குரிய நிபுணர்களை தொடர்புகொண்டு உரிய ஆலோசனைகளை பெற வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை.