தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதிகள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் சிலர் திடீரென்று அவர்களது கணவன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் சிலர் திடீரென்று அவர்களது கணவன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். 

 

1 /6

காதல் கொண்டேன் படத்தின்போது ஏற்பட்ட காதலால் இயக்குனர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  மூன்று வருடங்கள் கழித்து தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.   

2 /6

இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜாவும் அவரது மனைவி சுஜய்யாவிற்கும் 2005ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது.  தற்போது யுவன் சங்கர் ராஜா ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து மதம் மாறியுள்ளார்.   

3 /6

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று சொல்லக்கூடிய பிரபுதேவாவுக்கும் ராம்லதாவிற்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  பிறகு 2010ஆம் ஆண்டு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இதையே ஏற்பட்ட பழக்கத்தினால் ராம்லதா விவகாரத்து பெற்றார்.  அதன் பிறகு நயன்தாரா மற்றும் பிரபுதேவா இடையே விரிசல் ஏற்பட்டது.   

4 /6

தலைவா படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய்யும் அமலாபாலும் 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.  பிறகு தனிப்பட்ட காரணங்களால் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.   

5 /6

2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.  பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.   

6 /6

2004ஆம் ஆண்டு தனுஷ்-ம் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.  18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென்று இருவரும் பிரிய உள்ளதாக நேற்று அறிவிப்பை வெளியிட்டனர்.