சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் காலம்.... மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்

Sani Vakra peyarchi: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தனது ராசியை மாற்றுகிறது. இவற்றின் இயக்கங்களும் அடிக்கடி மாறுகின்றன. கிரகங்களின் ராசி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவானின் சிறிய மாற்றமும் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சி, செழிப்பு, கௌரவம் மற்றும் முன்னேற்றம் போன்ற பல நன்மைகளை இவர்கள் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரே ராசியில் அவர் அதிக காலத்திற்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். சனி பகவானின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

2 /10

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். சென்ற ஆண்டின் தொடக்கத்தில் அவர் இந்த ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் இருப்பார். எனினும், சனியின் இயக்கம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். ஜூன் 29, 2024 அன்று சனி கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைவார். 

3 /10

சனியின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

4 /10

வேத ஜோதிடத்தின்படி, சனியின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல ஆதாரங்களையும் பெறுவீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நல்ல நிதிப் பலன்களைத் தரும். மேலும் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கூடும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

5 /10

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் மற்றும் சனி இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். இதன் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் தனது ஆசிர்வாதத்தை எப்போதும் வழங்கி வருகிறார். சனியின் இந்த இயக்கத்தால், புதிய வேலை கிடைக்கலாம். மேலும் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கூடும். வருமானம் கூடும். 

6 /10

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சனி வக்ர பெயர்ச்சி அடைந்து அனுகூலமான பலன்களைத் தருவார். இந்த ஆண்டு சனியின் அருளால் நீங்கள் செய்யும் பெரும்பாலான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். ஒப்பந்தத்தை முடிக்க வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். சனியின் அருளால் பண பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சமுதாயத்தில் கௌரவம் பெறுவீர்கள். துலாம் ராசிக்காரர்கள் சனியின் அருளால் பெரிதும் நன்மை அடைவார்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவீர்கள்.

7 /10

தனுசு ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். சனி உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் தருவார். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான முழு வாய்ப்புகளையும் பெறுவீர்கள். நல்ல இடத்திலிருந்து வேலை வாய்ப்பு வரலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சனியின் அருளால் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து எளிதாக வெளிவருவீர்கள்.

8 /10

வேத ஜோதிடத்தின் படி, சனியின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். சனி பகவன் பல வெற்றிகளை அளிப்பார். மகர ராசிக்காரர்களின் பொருள் மகிழ்ச்சி விரிவடையும். வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

9 /10

சனி பகவானின் அருள் பெற இந்த ஸ்லோகத்தை தினமும் கூறலாம்: 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்!!'

10 /10

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.