Flour For Diabetic Patients To Control Blood Sugar: இந்தியர்கள் அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால், கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாவுகள் பல உள்ளன
சர்க்கரை நோய் இருப்பவர்கள், கோதுமை மற்றும் அரிசிக்கு பதிலாக இந்த மாவுகளை பயன்படுத்தி சப்பாத்தி, தோசை செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை பற்றி கவலையே இருக்காது
நீரிழிவு நோயில் உடல்நலம் குறித்து கவலைப்பட வேண்டியது அவசியம்
நோயாளியின் சர்க்கரை அளவு அதிகரித்தால், ஆரோக்கியம் மோசமடையும் மற்றும் சிறுநீரக நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும்.
பொதுவாக, நம்மில் பெரும்பாலோர் தினசரி உணவில் கோதுமை மாவு ரொட்டியை சாப்பிட விரும்புகிறோம், ஆனால் முழு தானிய மாவு சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கலாம். பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் நீரிழிவு நோயாளிகளுக்கு சில ஆரோக்கியமான மாவுகளை பரிந்துரைத்துள்ளார்.
பார்லி மாவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது.
கருப்புக் கொண்டைக்கடலையை சாப்பிட்டிருக்கலாம். ஆனால், அதன் மாவை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தாக இருக்கும். இது குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் நார்ச்சத்து, புரதம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கம்பு மாவை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
ராகி மாவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த உணவு மற்றும் பாலிபினால்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்களும் இதில் காணப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையானவை
பல்வேறு தானியங்களை சேர்த்து அரைத்து, அந்த மாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது
நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல தினை மாவு, சர்க்கரையை அதிகரிக்காது.