வேஷ்டி சட்டையில் விருது பெற்ற தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி!

டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணைமந்திரி எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர்.

1 /7

அசுரன் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் தேசிய விருதை  பெற்றார். வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும்.  

2 /7

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. தனுஷ் தேசிய விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார்  

3 /7

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்க்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.  

4 /7

அசுரன் படத்திற்காக தேசிய விருதை தயாரிப்பாளர் தாணு பெற்றார்.   

5 /7

ஜூரி சிறப்பு விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது  

6 /7

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது  

7 /7

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்திய திரைப்பட விருதில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.