மரகத நாணயம் பட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்கும் தனுஷ்?

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'மரகத நாணயம்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர்  ஏ.ஆர்.கே.சரவன் தற்போது தனுஷை வைத்து புதிய படம் இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 

1 /5

'மரகத நாணயம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'வீரன்' படம் வருகின்ற ஜூன் 2ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

2 /5

தற்போது 'வீரன்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் ஆதிரா ராஜ், வினய், காளி வெங்கட், முனீஷாகாந்த் போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.  

3 /5

பட ப்ரோமோஷனில் தனது எதிர்கால திட்டம் குறித்து பேசிய இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன், விரைவில் நடிகர் தனுஷை வைத்து இயக்கவிருப்பதாக கூறியுள்ளர்.  

4 /5

தனனுஷுக்காக இரண்டு, மூன்று கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், இதுபற்றி தனுஷிடம் பேசியிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குனர்  ஏ.ஆர்.கே.சரவன் தெரிவித்துள்ளார்.  

5 /5

'மரகத நாணயம்' படத்தை பார்த்து தனுஷ் பாராட்டியதாகவும், அதனால் எனது கதை அவருக்கு பிடிக்கும் என்பதால் நான் அவரை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.