பணத்தை முதலீடு செய்ய மிக பாதுகாப்பான வங்கிகள் குறித்த RBI பட்டியல்!

இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள்: அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதை அடுத்து, இந்திய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களும் தங்களது டெபாசிட்  பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளனர். நாம் முதலீடு செய்வதற்கு முன் வங்கி பாதுகாப்பானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

 

1 /5

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கிய வங்கிகள் (D-SIBs) 2022 என்ற பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், நாட்டின் முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பான வங்கிகள்  குறித்து கூறப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில், உங்கள் பணம் எந்த வங்கியில் பாதுகாப்பாக உள்ளது, எந்த வங்கியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 /5

நாட்டின் பாதுகாப்பான வங்கிகள் பட்டியலில் ஒரு அரசு மற்றும் இரண்டு தனியார் வங்கிகளின் பெயர்களை ரிசர்வ் வங்கி சேர்த்துள்ளது. பொதுத்துறையில் இருந்து, இதில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் HDFC வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் ICICI வங்கியின் பெயர்கள் உள்ளன.

3 /5

உங்கள் கணக்கு SBI, HDFC வங்கி அல்லது ICICI வங்கியில் இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. இந்த பட்டியலில், உள்ள வங்கிகள் சாதாரண மூலதன பாதுகாப்பு இடையகத்துடன் கூடுதலாக, கூடுதல் பொது ஈக்விட்டி அடுக்கு 1 (Additional Common Equity Tier 1) என்னும் பாதுகாப்பான அளவை பராமரிக்க வேண்டும்.

4 /5

ரிஸ்க் அதிகம் உள்ள சொத்துகளின் சதவீதமாக எஸ்பிஐ கூடுதலாக 0.6 சதவீத CET1 ஐ பராமரிக்க வேண்டும். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கூடுதல் 0.2 சதவீதத்தை பராமரிக்க வேண்டும்.

5 /5

ரிசர்வ் வங்கி மேலே குறிப்பிட்டுள்ள வங்கிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த வங்கிகளின் அன்றாட செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. எந்தவொரு பெரிய கடன் அல்லது கணக்கையும் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.