Toyota SUV Defect: டொயோட்டா காரில் குறைபாடு: நிறுவனம் வெளியிட்ட முக்கியமான தகவல்

Defected Toyota SUV: டொயோட்டா SUV காரில் குறைபாடு இருப்பதாக அந்த நிறுவனம் முக்கியமான தகவல் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடுத்தர அளவிலான வாகனம் Toyota Urban Cruiser Hyrider SUVயின் 994 யூனிட்களை சீட் பெல்ட் பகுதியை சரிசெய்வதற்காக திரும்பப் பெறுகிறது நிறுவனம்.

1 /5

இயந்திரக் கோளாறு காரணமாக கார்களை திரும்பப் பெறும் டொயோட்டா கிர்லோஸ்கர்!

2 /5

முன் சீட் பெல்ட் ஷோல்டர் ஹைட் அட்ஜஸ்டர் பிளேட் அசெம்பிளியை சரிபார்க்க சில அர்பன் க்ரூஸர் ஹைரைடர் யூனிட்டுகளுக்கு தன்னார்வ ரீகால் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

3 /5

இந்த மாடலின் சுமார் 994 வாகனங்கள் பாதிக்கப்படலாம் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது

4 /5

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்திக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, திரும்பப்பெறுதல் தொடங்கப்படுவதாகவும், இலவசமாக மாற்றப்படும் என்றும் வாகன உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

5 /5

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15,11,000 முதல் ரூ.18,99,000 வரை எனபது குறிப்பிடத்தக்கது.