தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான உடன்பிறப்புகளான செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோர் தங்களது உழைப்பு மற்றும் அபரிமிதமான வளர்ச்சியால் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 'துள்ளுவதோ இளமை' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்கள், 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'யாரடி நீ மோகினி' மற்றும் 'மயக்கம் என்ன' ஆகிய திரைப்படங்களை இணைந்து வழங்கியுள்ளனர்.
இப்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தி என்னவென்றால், 'டி 50' என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.
தனுஷ் தனது சகோதரரை எப்படிபட்ட கதாபாத்திரத்தில் காட்ட போகிறார் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், என பல நட்சத்திர பட்டாளங்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
D50 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி, ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு நடந்து வருகிறது.
அதே நேரத்தில் செல்வராகவன் '7 ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் வேளைகளில் இருந்து வருகிறார். 'மார்க் ஆண்டனி' படத்திலும் நடித்து உள்ளார் செல்வராகவன்.