Tamil Movies Within 3 Hours : சில நல்ல தமிழ் படங்களை 3 மணி நேரத்திற்குள்ளாகவே பார்க்கலாம். அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
Tamil Movies Within 3 Hours : படம், சுவாரஸ்யமாக அமைவதற்கு அந்த படத்தின் நீளமும் ஒரு பெரிய காரணமாக அமையும். ஒரு சிலர், படங்களை பார்ப்பதற்கு முன்னர் அதன் ரன் டைம் எவ்வளவு என்பதை முதலில் இணையத்தில் செக் செய்து கொள்வர். இதனால், படம் வளவளவென இருக்குமா, அல்லது ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக இருக்குமா என்பதை பலர் கணித்து விடுவர். அந்த வகையில், தமிழ் சினிமாவில் சில படங்கள் 3 மணி நேரத்திற்கும் குறைவாக வந்திருக்கிறது. அந்த படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாமா?
ஒரு சில தமிழ் படங்கள், 2 அரை மணி நேரத்திற்குள் முடிந்து விட்டாலும் படம் பார்த்தவர்களுக்கு நல்ல படைப்பை பார்த்த உணர்வை கொடுக்கும். இப்போது வரும் பெரும்பாலான தமிழ் படங்கள், 3 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு குறைவாக வருவதில்லை. அந்த வகையில், நாம் 3 மணி நேரத்திற்குள் பார்க்க கூடிய நல்ல தமிழ் படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கல் அனைத்தும் ஹிட், நடிகர்களின் பங்கு அபாரம், திரைக்கதைக்கு ஃபர்ஸ் மார்க் என்று அப்போதே விமர்சனம் வாங்கிய படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, ஷாமிலி, அபாஸ் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இதன் ரன் டைம் 2 மணி நேரம், 38 நிமிடங்கள். இதனை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
சூப்பர் டீலக்ஸ்: பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்த ஆந்தாலஜி படம், சூப்பர் டீலக்ஸ். இதனை தியாகராஜன் குமாரசாமி இயக்கியிருந்தார். இதன் ரன் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்களாகும் . இதனை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
சூது கவ்வும்: இந்த படத்தை மறக்க முடியுமா? 11 வருடங்களுக்கு முன்பு டார்க் காமெடி என்ற கான்செப்டை கொண்டு வந்த ட்ரெண்ட் செட்டர் ஆச்சே இது! இதனை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 18 நிமிடங்களாகும். இதனை, ஜீ 5 தளத்தில் இலவசமாக பார்க்கலாம்.
காக்கா முட்டை: தேசிய விருது வரை வென்ற படம் இது. நடிகை ஐஸ்வர்யா விற்கு, ‘காக்கா முட்டை ஐஸ்வர்யா’ என்ற பெயரையும் இப்படம்தான் பெற்று தந்தது. இதனை மணிகண்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் ரன் டைம், 1 மணி நேரம் 49 நிமிடங்களுக்குள் பார்த்து விடலாம். இப்படத்தை இலவசமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணலாம்.
ஜிகர்தண்டா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம், ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மி மேனன் உள்ளிடோர் இதில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 51 நிமிடங்களாகும். இதனை, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம்.
பீட்ஸா: கார்த்திக் சுப்புராஜிற்கு, திருப்புமுனையாக அமைந்த படம், பீட்ஸா. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். இப்படத்தின் ரன் டைம் 2 மணி நேரம்தான். இதனை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம்.