கிரிக்கெட்டில் இதுவரை கேல்ரத்னா விருது பெற்றவர்கள்!

1991/92ல் நிறுவப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாகும். விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்கத்தில் தனது சாதனைகளுக்காக இந்த விருதை நிறுவப்பட்ட ஆண்டில் முதலில் பெற்றார்.  பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதின் பெயரை மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என மாற்றினார்.

1 /5

கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் மற்றும் எட்டாவது விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.  1997/98ம் ஆண்டில் இந்த விருதினை பெற்றார் சச்சின  

2 /5

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஒரு கிரிக்கெட் வீரர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வெல்வதற்கு 10 ஆண்டுகள் ஆனது.  இந்த கவுரவம் பெற்றவர் வேறு யாருமல்ல, இந்திய அணியின் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனிக்கு தான். 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதற்காக இந்த விருது வழங்கப்பட்டது  

3 /5

எம்எஸ் தோனிக்கு விருது வாங்கிய 11 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி 2018ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார்  

4 /5

கடந்த ஆண்டு ரோஹித் சர்மா கேல் ரத்னா விருது பெற்றார். கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில், இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக ரோஹித் சர்மா இருந்து வருகிறார்  

5 /5

இந்த ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கபட்டுள்ளார்