ஜியோவின் அசத்தல் திட்டம்... இலவச டேட்டா... 388 நாட்கள் வேலிடிட்டி... மிஸ் பண்ணாதீங்க!

ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை வழங்குகிறது. ஜியோ ஒவ்வொரு பிரிவிலும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் ஜியோ ஒரு வருட வேலிடிட்டியுடன் ஒரு சிறந்த திட்டத்தை கொண்டுள்ளது. அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வழக்கமான மாதாந்திர திட்டத்தை விட அதிக நன்மைகள் மற்றும் குறைந்த செலவு கொண்ட நீண்ட நாட்களுக்கான திட்டத்தை விரும்புகிறார்கள். ஜியோவின் இத்தகைய வெற்றிகரமான வருடாந்திர திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

1 /5

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வழக்கமான மாதாந்திர திட்டத்தை விட அதிக நன்மைகள் மற்றும் குறைந்த செலவு கொண்ட நீண்ட நாட்களுக்கான திட்டத்தை விரும்புகிறார்கள். ஆனால்  அந்த வகையில்  ஜியோவின் வருடாந்திர திட்டம் பலருக்கு மிகவும் பிடித்தமான திட்டமாக இருக்கும் என்றால் மிகையில்லை.

2 /5

ஜியோவின் வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்:  ஜியோவின் ரூ.2999 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 12 மாதங்கள். அதாவது, இந்த திட்டம் 365 நாட்களுக்கு செயலில் இருக்கும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், 23 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியுடன் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, உங்கள் திட்டம் 388 நாட்களுக்கு செல்லுபடியாகும். 

3 /5

ஒரு முறை ரீசார்ஜ் செய்த பிறகு மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் தொல்லை நீங்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். தினமுசரி இன்டர்நெட் வரம்பு காலியான பிறகு வேகம் குறையும். இந்த திட்டத்தின் மாதாந்திர கட்டணத்தை பார்த்தால் வெறும் ரூ.250 தான்.

4 /5

வருடாந்திர திட்டத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு சேவைகளையும் பெறுவார்கள். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம். 

5 /5

வருடாந்திர  திட்டத்தின் பிற நன்மைகளைப் பற்றி குறிப்பிடுகையில், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி உள்ளிட்ட ஜியோ ஆப்ஸின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள். மேலும் 5ஜி சேவையையும் அனுபவிக்க முடியும்.