SBI டெபிட் கார்டு வைத்திருப்பவரா? கட்டண உயர்வுக்கு தயாராகுங்கள்! GST கூடுகிறது!

SBI Debit Cards Annual Maintainance Charges : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! டெபிட் கார்டுகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. 

1 /7

எஸ்பிஐ டெபிட் கார்டுதாரர்களுக்கு, வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்படுகிறது

2 /7

டெபிட் கார்டுகளின் வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்களில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்   

3 /7

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது.  

4 /7

புதிய கட்டணங்கள் 01 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது. கிளாசிக் / சில்வர் / குளோபல் /  டெபிட் கார்டுகள். ரூ.125/ +ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 200/ + ஜிஎஸ்டி வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்

5 /7

யுவா/தங்கம்/காம்போ டெபிட் கார்டு/இமேஜ் கார்டு ரூ.175/ + ஜிஎஸ்டி என்பதில் இருந்து ரூ. 250/+ ஜிஎஸ்டி என வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் அதிகரிக்கும்

6 /7

 பிளாட்டினம் டெபிட் கார்டு கட்டணம் ரூ. 250/ +ஜிஎஸ்டி என்பதில் இருந்து ரூ. 325/+ ஜிஎஸ்டி ஆக அதிகரிக்கும்  

7 /7

பிரைடு / பிரீமியம் வணிக டெபிட் கார்டு ரூ.350/ +GST என்பதில் இருந்து ரூ. 425/+ ஜிஎஸ்டி ஆக கட்டணம் அதிகரிக்கும்