Fixed Deposits And Income To Govt: மூத்த குடிமக்கள் எனப்படும் சீனியர் சிட்டிசன்களின் சேமிக்கும் வழக்கத்தினால், மத்தீய அரசுக்கு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலாகியுள்ளது.
சேமிப்பினால் தனிப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும் என்று நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் ஆராய்ச்சி கூறுகிறது. அது எப்படி? தெரிந்துக் கொள்வோம்...
கடந்த ஐந்தாண்டுகளில் சீனியர் சிட்டிசன்களின் மொத்த டெபாசிட் அளவு 143 சதவீதம் உயர்ந்துள்ளதாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.
ரூ.14 லட்சம் கோடியாக இருந்த டெபாசிட் தொகை, ரூ.34 லட்சம் கோடியாக ஒரே நிதியாண்டில் உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், மூத்த குடிமக்கள் டெர்ம் டெபாசிட் மூலம் பெற்ற வட்டியின் மூலம், அரசு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலித்துள்ளது
அதிக வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய அதிக வட்டிக்கு வழிவகுத்துள்ளது
மொத்த டெர்ம் டெபாசிட் கணக்குகளின் எண்ணிக்கை 81 சதவீதம் அதிகரித்து 7.4 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
குறைந்தது 7.3 கோடி கணக்குதாரர்களின் வங்கிக் கணக்கில், ரூபாய் 15 லட்சத்திற்கு மேல் இருப்பு உள்ளது. இந்த வைப்புத்தொகைக்கு 7.5 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது
மூத்த குடிமக்கள் 2023-2024 நிதியாண்டில் வட்டியாக மட்டும் 2.7 லட்சம் கோடி சம்பாதித்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் 10 சதவிகிதம் (சராசரி) வரி செலுத்தினால், இந்திய அரசின் வரி வசூல் சுமார் 27,106 கோடி ரூபாய் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை சொல்கிறது
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை