நவம்பர், டிசம்பரில் அதிக எதிர்பார்ப்பில் வெளியாக இருக்கும் படங்கள்!

2023ம் ஆண்டு சில மாதங்களில் முடிவடைய உள்ளது.  இந்நிலையில், அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள சில படங்கள் வெளியாக உள்ளது.  

 

1 /5

டுங்கி (Dunki) - ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டுங்கி படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க, டாப்ஸி பண்ணு, போமன் இரானி, தர்மேந்திரா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  டிசம்பர் 21ம் தேதி படம் வெளியாகிறது.   

2 /5

சலார் (Salaar) - பிரசாந்த் நீல் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பான் இந்திய படமாக டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது.  

3 /5

அன்பேஷிப்பின் கண்டேதும் (Anweshippin Kandethum) இந்த மலையாள திரில்லர் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் டார்வின் குரியகோஸ் இயக்கிய இந்தப் படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து உள்ளார்.   

4 /5

அனிமல் (Animal) - சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது.  

5 /5

கேப்டன் மில்லர் (Captain Miller) - அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது.