பட்ஜெட் விலையில் பக்காவான டேப்லெட் - சிறப்பம்சங்கள் இதோ!

டேப்லெட் என்றாலே விலை அதிகம் இருக்கும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கும். அந்த வகையில், மலிவு விலையில் தரமான பல அம்சங்கள் கொண்ட டேப்லெட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.

 

 

 

1 /7

Oukitel OT5 டேப்லெட்டின் பிரமாண்ட 12-இன்ச் டிஸ்ப்ளே இதை ஒரு அற்புதமான டேப்லெட்டாக உருமாற்றுகிறது. அதன் தெளிவான 2K ரெஸ்சோல்யூஷன் மற்றும் ஈர்க்கக்கூடிய 86% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கேம்கள் மற்றும் செயலிகளின் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.   

2 /7

இந்த பெரிய, துடிப்பான திரை அழகானது மட்டுமல்ல இது பயனர் அனுபவத்தையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக இது தீங்கு விளைவிக்கும் புறஊதா ஒளியில் இருந்து பயனர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

3 /7

இது நீண்ட கால பயன்பாட்டிற்கு கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு குறிப்பாக குறைந்த ஒளி சூழலில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.  

4 /7

பேட்டரி: இதன் மிகப்பெரிய 11,000mAh பேட்டரி நாள் முழுவதும் இதனை பயன்படுத்தலாம். இந்த பவர்ஹவுஸ் பேட்டரி 1,200 மணிநேர காத்திருப்பு நேரத்தை வழங்குகிறது.  

5 /7

ஸ்டோரேஜ்: இதன் 12 GB RAM, அதை ஒரு சக்திவாய்ந்த பல்பணி டேப்லெட்டாக மாற்றுகிறது. இந்த டேப்லெட்டில் 256 GB   இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2 TB வரை ஸ்டோரேஜை விரிவாக்க முடியும். இந்த டேப்லெட் மூலம், உங்கள் அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் எவ்வித கவலையும் இன்றி சேமித்து வைத்துக்கொள்ளலாம்.  

6 /7

கேமரா: இந்த டேப்லெட்டில் 16MP பிரதான பின்புற கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா தெளிவான வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுக்க உதவும்.  

7 /7

விலை: இந்த டேப்லெட்டின் விலை வெறும் 199.99 அமெரிக்க டாலர்தான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 17 ஆயிரம்தான். நவம்பர் 11 முதல் 17 வரையிலான பிரீமியர் விற்பனையின் போது, முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு OUKITEL அதிகாரப்பூர்வ ஸ்டோரில் இருந்து $20 கூப்பன் வழங்கப்படுகிறது. இதன் விலை அப்போது ரூ.14,986 ஆக குறையும்.