Budget 2022: கலால் வரி, சுங்க வரி விகிதங்களில் ஏற்பட்டுள்ள டாப் 5 அறிவிப்புகள்

இன்று (பிப்ரவரி 1, 2021), நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மாநில அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் பங்களிப்பில் 14 சதவீதம் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். வரி செலுத்துவோர் வருமானத்தை பதிவு செய்யத் தவறினால், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

1 /5

எரிபொருளைக் கலப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, அக்டோபர் 1, 2022 முதல் கலப்படமில்லாத எரிபொருளுக்கு, லிட்டருக்கு ரூ.2 கூடுதல் கலால் வரி விதிக்கப்படும்.

2 /5

குடைகளுக்கான வரி 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

3 /5

குறைந்த மதிப்பிலான நகைகளை இறக்குமதி செய்வதைத் தடுக்க, போலி நகைகளின் மீதான சுங்க வரி, அதன் இறக்குமதியின் மீது ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ. 400 வரி விதிக்கப்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4 /5

இ-காமர்ஸ் மூலம் நகைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் எளிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு செயல்படுத்தப்படும்.  

5 /5

விலை உயர்ந்த கற்கள் மற்றும் நகைகள் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், வெட்டி பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.