இன்று தாக்கல் பட்ஜெட்டில் அனைத்து தரப்பு பெண்களுக்கும் மிகப்பெரிய பரிசுகளை வழங்கி உள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில், பெண்கள் வருமானத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்ட ஈபிஎப் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 8 சதவீதமாக குறைப்பு.
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும் கடன் 37% உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்களுக்க்கான இலவச வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் 5 கோடியில் இருந்து, தற்போது 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாகவும், புதிய இந்தியாவை வலுப்படுத்தும் விதமாகவும் பட்ஜெட் அமைந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.