சென்னையில் 1000 4G டவர்கள்...BSNL போடும் அதிரடி திட்டம்.... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!!

அரசுக்கு சொந்தமான பாரஸ்ட் சென்சார் நிகம் லிமிடெட், தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களின் கட்டண உயர்வால் மக்கள் பிஎஸ்என்எல் அலுவலகங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

தனியார் தொலைத்தொடைப்பு நிறுவனங்கள், இந்த மாத தொடக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக, போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதை அடுத்து மக்கள் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

1 /8

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வை அடுத்து, கடந்த இரு வாரங்களில் மட்டும் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவத்திற்கு மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 /8

வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஏற்கவும், தனது நெட்வொர்க்கை வலுப்படுத்த, பிஎஸ்என்எல் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது.

3 /8

இந்தியாவின் பல இடங்களில் 4ஜி சேவையை வழங்க துவங்கியுள்ள பிஎஸ்என்எல், சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் புதிதாக 1000 4ஜி டவர்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4 /8

சென்னையில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களிலும், பல ஆயிரம் 4ஜி டவர்கள் நிறுவப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

5 /8

டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள BSNL நிறுவனம், தொலைத் தொடர்பு துறைக்குள் கொடுக்கும் ரீ என்ட்ரி, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது எனலாம்.

6 /8

பிஎஸ்என்எல் நிறுவனம், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (TCS) நிறுவனத்துடன் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,000 கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம்.

7 /8

டாடாவுடனான ஒப்பந்தம், வரும் நாட்களில் கிராமப் புறங்களில் வேகமான இணையதள சேவையை வழங்க உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

8 /8

மத்திய அரசும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4G, 5G தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் உட்பட, அரசு துறை நிறுவனத்தை ஊக்குவிக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் 82,916 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது.