சமீபத்தில், தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களின் பார்வை பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்துடன் கூடிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால், மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தாமல், லாபம் காணும் உத்தியை கடைபிடிப்பதன் காரணமாக, சமீப காலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பலர் தங்களுடைய பிற நிறுவனங்களின் மொபைல் எண்களை BSNL சிம்மிற்கு போர்ட் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
BSNL வழங்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம் மூலம் (BSNL Rs.2999 Plan) இணைய சேவையை ஆண்டு முழுவதும் தடையின்றி பயன்படுத்தி பலனடையலாம்
ஒரு வருட வேலிடிட்டி: பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் ஒரு வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. அதிக அளவில் டேட்டா பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம்.
600GB டேட்டா: BSNL வழங்கும் ரூ. 2999 திட்டத்தில், 600GB டேட்டா வரம்பிற்கு பின், இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்: BSNL வழங்கும் இந்த வருடாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுன் கிடைக்கும் இத்துடன் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் பயனர்கள் பெறுவார்கள்.
பிஎஸ்என்எல் ரூ. 2999 திட்டம் மூலம் OTT நன்மை மற்றும் இதர இலவச நன்மைகளும் கிடைக்கும். இதில் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் EROS NOW Entertainment சந்தா பலனும் கிடைக்கும்
பிஎஸ்என்எல் 4G சேவை: பிஎஸ்என்எல் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்க, தனது 4G சேவைகளை வேகமாக விரிவுபடுத்துகிறது. சமீபத்தில், BSNL தனது சொந்தமாக 15,000+ 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.