காலையில் சாப்பிட பிடிக்கவில்லையா? இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க!

புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்துள்ள பருப்பு வகைகளில் செய்யப்படும் உணவுகள் ருசியாக இருப்பதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

 

1 /7

தால் சட்னி அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும்.  கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு, பாசிபருப்பு மற்றும் அர்ஹர் உள்ளிட்ட பல பருப்புகளின் கலவையுடன் செய்யப்படும் இந்த சட்னியை எந்த உணவோடும் சேர்த்து சாப்பிடலாம்.  

2 /7

இட்லி செய்வதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் உளுத்தம் பருப்புக்கு பதிலாக ஸ்ப்ரவுட்ஸ்களை பயன்படுத்தி இட்லி செய்யலாம்.  இது சுவையாக இருப்பதோடு, உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.   

3 /7

பாசிபருப்பு சேர்த்து செய்யப்படும் தால் பராதா அதிக புரோட்டீன் நிறைந்ததாகவும், சுவையாகவும் இருக்கும். காலை நேர உணவில் ஒரு கிண்ணம் தயிருடன் சேர்த்து இதனை சாப்பிடுவது சிறந்தது.  

4 /7

ஆந்திராவின் பிரபலமான உணவுகளில் ஒன்று பேசரட்டு எனும் தோசை, பாசிபருப்பில் செய்யப்படும் இந்த பச்சை நிற தோசை சுவையாக இருப்பதுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.   

5 /7

ஒவ்வொரு பாரம்பரிய வட இந்திய விருந்துகளிலும் பிரபலமாக இடம்பெறுவது இந்த தால் ஷோர்பா, இது பருப்பில் செய்யப்பட்ட ஒரு சுவையான சூப்.  மழைக்காலங்களில் இந்த காரசாரமான சூப் சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும்.  

6 /7

ஆரோக்கியமான இந்திய ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று இந்த தோக்லா, புளித்த மாவில் செய்யப்படும் இந்த தோக்லா நிறைய கலோரிகளை கொண்டுள்ளது.   

7 /7

வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் போன்ற ஆரோக்கியமான பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் சின்ஹா 'மூங்க்லெட்' அல்லது  'மூங் டால் ஆம்லெட்' காலை நேரத்திற்கு ஏற்ற சிறந்த அல்லது  புரதச்சத்து நிறைந்த உணவாகும்.