BOLD Photoshoots: துணிச்சலான போட்டோஷீட்டுக்கு பெயர் பெற்ற நடிகைகள்

பாலிவுட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் தைரியமான பத்திரிக்கையின் போட்டோஷூட்கள் தலைப்புச் செய்திகளை பிடித்துள்ளன. தீபிகா படுகோனின் மிகவும் பேசப்படும் தைரியமான புகைப்பட அட்டை போட்டோ முதல் கங்கனா ரணாவத்தின் 2007 ஸ்டார்டஸ்ட் இதழ் அட்டை வரை துணிச்சலான போட்டோஷீட் நடத்திய சில பிரபல நடிகைகள்

 

1 /7

பாலிவுட் பிரபலங்கள் பத்திரிக்கை போட்டோஷூட்களுக்கு தைரியமாக செல்வதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. தீபிகா படுகோனின் மிகவும் பேசப்படும் தைரியமான மாக்சிம் அட்டையிலிருந்து கங்கனா ரணாவத்தின் 2007 ஸ்டார்டஸ்ட் இதழ் அட்டை வரை  பல போஸ்கள் பிரபலமானவை. சர்ச்சைகளை ஏற்படுத்திய பத்திரிக்கை அட்டைப்பட புகைப்படங்கள் (பட உபயம்: இன்ஸ்டாகிராம் ரசிகர் பக்கங்கள்/பத்திரிகை அட்டைப் படங்கள்)

2 /7

2010 இல், வித்யா பாலன் FHM இந்தியாவின் மூன்றாம் ஆண்டு நவம்பர் இதழின் அட்டைப்படத்தில்  சேலை அணிந்திருந்த வித்யா பாலனின் புகைப்படம் வெளியானது. சேலை அணிந்திருந்தாலும் ஜாக்கெட் அணியவில்லை என்று சொல்லாமல் சொன்ன புகைப்படம் இது

3 /7

பிரியங்கா சோப்ரா, உலகளாவிய ஐகானின் காண்டே நாஸ்ட் டிராவலர் இந்தியா இதழின் போட்டோஷூட், சர்சையை எழுப்பியது. டி-ஷர்ட்டில் உள்ள மேற்கோளில் சிலர் மகிழ்ச்சியடையாததால் விமர்சனங்கள் வலுத்தன. அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான அலட்சியத்தை காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

4 /7

1994 ஆம் ஆண்டு ஸ்டார்டஸ்ட் அட்டையில் நடிகை மாதுரி தீட்சித் இடம்பெற்றிருந்தார், ஆனால் பக்கத்தில் பூஜா பட் மற்றும் தந்தை மகேஷ் பட் ஆகியோர் முத்தமிடும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மகளுக்கும் தந்தைக்கும் இடையிலான முத்த புகைப்படம் பலரை எரிச்சலடையச் செய்தது, இதன் விளைவாக எதிர்ப்புகள் எழுந்தன.

5 /7

`ராம் தேரி கங்கா மைலி' படத்தில் நடித்து புகழ் பெற்ற மந்தாகினி, 1985 ஆம் ஆண்டு நீர்வீழ்ச்சியில் நின்று போஸ் கொடுத்த ஃபிலிம்பேர் அட்டைப்படம் பிரபலமானது

6 /7

2007 ஆம் ஆண்டு பதிப்பில், ஸ்டார்டஸ்ட் இதழில் அறிமுக நடிகை கங்கனா ரனாவத்  மேலாடையின்றி போஸ் கொடுத்தார். `அப்பட்டமான உண்மை அம்பலமானது` என்ற தலைப்பில் வெளியான அட்டைப்படம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது

7 /7

1984 ஆம் ஆண்டு ஸ்டார்டஸ்ட் அட்டையில் வெளியான அட்டைப்படம் மிகவும் பேசப்பட்டது. நீண்ட நாட்களாக தலைப்புச் செய்திகளில் இருந்த புகைப்படம் அது. காரணம் என்ன தெரியுமா? நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் மற்றும் ஜீனத் அமான் ஆகியோரின் உணர்ச்சிமிக்க லிப்லாக் போட்டோ என்பது சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமானது.