பாஜக எம்பி நடிகை கங்கனாவிற்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?

தன்னுடைய சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமாகி தற்போது பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் எம்பியாகி உள்ளார் நடிகை கங்கனா ராவத். தற்போது எம்பியாக உள்ள கங்கனாவுக்கு கிடைக்க உள்ள சலுகைகள், மாத சம்பளம் ஆகியவற்றை பற்றி பார்ப்போம். 

 

1 /6

இந்திய மக்களவையில் ஒரு எம்.பி.யின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ.1 லட்சம் ஆகும். 2018ல் ஊதிய உயர்வுக்குப் பிறகு இந்தத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களை பராமரிப்பதற்கும், தொகுதிக்கு செல்லவும் உதவித்தொகையாக மாதம் ரூ.70,000 பெறுகின்றனர்.  

2 /6

மேலும் அலுவலகச் செலவுகளுக்காக மாதம் ரூ.60,000 பெறுவார். இதில் பேனா, பென்சில் உட்பட தொலைத்தொடர்புக்கான தொகை, ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் அடங்கும்.  

3 /6

அனைத்து எம்.பி.க்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒரு ஆண்டுக்கு 34 முறை இலவசமாக உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தங்களின் சொந்த வேலை மற்றும்  தனிப்பட்ட நோக்கங்களுக்காக இலவச முதல்-வகுப்பு ரயில் பயணத்தைப் பெறுவார்கள்.  

4 /6

எம்.பி.க்களுக்கு அவர்கள் தங்க பங்களாக்கள், பிளாட்கள் அல்லது தங்கும் விடுதி அறைகள் உள்ளிட்டவை வாடகை இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும். மேலும் எம்பிக்கும் அவரது குடும்பங்களுக்கும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் இலவச மருத்துவ சேவையை வழங்கப்படுகிறது.  

5 /6

ஒவ்வொரு எம்.பி.க்களும் ஆண்டுதோறும் 1,50,000 இலவச தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இலவச அதிவேக இணைய இணைப்புகளைப் பெறுகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை இலவச மின்சாரமும், தண்ணீரும் வழங்கப்படுகிறது.  

6 /6

இந்த வசதிகளை எல்லாம் நடிகையும், எம்பியுமான கங்கனா பெற உள்ளார். அரசின் இத்தனை சலுகைகளை பெற்றுள்ள கங்கனாவின் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.