Bigg Boss Tamil: வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்த தினேஷ்! யார் இவர்?

Biggboss Tamil 7: பிக்பாஸ் சீசன் 7 தொடர் கடந்த நான்கு வாரங்களாக வெற்றிகரமாக சென்று கொண்டு உள்ளது.  சிலர் வெளியேறி, புதிய நபர்களும் வந்துள்ளனர்.

 

1 /6

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் 7 இந்த ஆண்டும் சுவாரஸ்யம் குறையாமல் நடைபெற்று வருகிறது.   

2 /6

பிக்பாஸ் தமிழ் 7 நான்கு வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்று உள்ளனர்.  அவர்களில் ஒருவராக தினேஷ் கோபால்சாமியும் சென்றுள்ளார்.  

3 /6

தினேஷ் பிரபலமான சீரியல் நடிகர். மஹான் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். இருப்பினும், பூவே பூச்சூடவா மற்றும் நாச்சியார்புரம் ஆகியவற்றின் மூலம் புகழ் பெற்றார்.   

4 /6

அவர் ரசிதா மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் சிறிது காலம் பிரிந்துள்ளனர். ரசிதா இவரின் மீது புகார் அளித்துள்ளார்.  

5 /6

ரசிதா மகாலட்சுமி கடந்த சீசனில் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

6 /6

புதிதாக வீட்டிற்குள் நுழைந்த 5 பேரையும் இந்த வார கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளதால் இந்த வார போட்டி சுவாரஸ்யமாக உள்ளது.