பிக் பாஸ் சீசன் 6: இவர்கள்தானா பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்

Bigg Boss Tamil 6 Latest Update: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது விரைவில் 6வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது முதல் போட்டியாளரின் விவரம் வெளியாகியுள்ளது.

1 /5

இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 6 க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிக்கரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த சீசனில் கொரோனா தொற்றால் கமல்ஹாசன் பதிக்கப்பட்டிருந்தபோது ஒருவாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

2 /5

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன். நிகழ்ச்சியின் கடைசியில் விக்ரம் பட ஷூட்டிங்கிற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியறினார் அதன்பிறகு நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்னிகினார்.

3 /5

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசன் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

4 /5

இந்நிகழ்ச்சி விஜய் டிவி மட்டுமல்லாது ஒடிடி தளத்திலும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 /5

இந்நிலையில் கடந்த நாட்களாக பிக் பாஸ் சீசன் 6 குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி ஆங்கர் ரக்‌ஷன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின. இந்த தகவலை ஆங்கர் ரக்‌ஷன் இதுவரை உறுதி செய்யவில்லை.