புத்தாண்டு ராசிபலன்: சூப்பரான வாழ்க்கை, அமோக வளர்ச்சி...இந்த ராசிகளுக்குதான்!!

Lucky Zodiac 2023: 2023 ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம். பிறக்கவிருக்கும் புத்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்? வாழ்க்கையில் எந்த அளவு முன்னேற்றம் இருக்கும்? குழந்தைகளின் படிப்பு, திருமணம், பதவி உயர்வு, வணிகம் என வாழ்வின் அனைத்து அம்சங்களும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

ஜோதிட கணக்கீடுகளின் படி, 2023 ஆம் ஆண்டில், மூன்று ராசிகளுக்கு நல்ல நேரம் வரப்போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் தரும். இவர்களுக்கு கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை மற்றும் கிரகங்களின் சஞ்சாரம் ஆகியவை சுப பலன்களைத் தரும்.

1 /4

ஜோதிட சாஸ்திரப்படி, 2023-ம் ஆண்டின் துவக்கத்திலேயே சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கமும், சில ராசிகளுக்கு சனி தசையின் தாக்கமும் தொடங்கும். இருப்பினும், கிரகங்களின் தாக்கத்தாலும், சுப யோகத்தாலும் சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியை பரிசாக தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

2 /4

2023 ஆம் ஆண்டு முழுவதுமே மிதுன ராசிக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். 2023 ஆம் ஆண்டில், இவர்கள் ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை பெறுவார்கள். இந்த ஆண்டு உங்கள் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். 2023 வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் அறிவாற்றலை சரியாக பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.  

3 /4

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் இந்த வருடம் முடிவடையும். வரும் புத்தாண்டில் உங்கள் தொழிலில் பல வாய்ப்புகளை காண்பீர்கள். இந்த ஆண்டு புதிய சவால்களை மிக எளிதாக எதிர்கொள்வீர்கள். முற்றிலும் புதிய வாய்ப்புகளையும் வெற்றிகளையும் சந்திப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் மரியாதை அதிகரிக்கும்.  

4 /4

விருச்சிக ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஒவ்வொன்றையும் முழுமையாகப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். 2023 உங்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். தொழில் ரீதியாகவும், புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். வேலை தெடுபவர்களுக்கு இந்த வருடம் புதிய வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க முழு வாய்ப்புகள் உள்ளன. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)