புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, நல்ல காலம் ஆரம்பம்

Mercury Transit: கிரகங்களின் இளவரசன் என்று கூறப்படும் புதன், நாளை அதாவது மார்ச் 7ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ளார். கும்ப ராசியில் இருக்கும் புதன் இப்போது மீன ராசிக்கு பெயர்ச்சியாவார்.

 

Mercury Transit: பேச்சாற்றல், அறிவாற்றல், புத்தி கூர்மை, வேலை, வியாபாரம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு பிரச்சினைகளும் ஏற்படும். 12 ராசிகளிலும் (Zodiac Signs) புதன் பெயர்ச்சியின் தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்

1 /13

மேஷம் பணியிடத்திலும் வியாபாரத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சவால்களை சந்திக்க நேரிடலாம். அனைத்து விஷயங்களிலும் அதிகப்படியான கவனம் தேவை

2 /13

புதன் பெயர்ச்சி உங்களுக்கு லாபகரமானதாகவும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். . வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கும் லாபம் அதிகரிக்கும்

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பயிற்சி கலவையான பலன்களை அளிக்கும். உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை. இல்லை என்றால் தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளலாம். நீங்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் அதிகப்படியான கவனம் தேவை

4 /13

புதன் பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். அடிக்கடி நிதி நெருக்கடி வரக்கூடும். இந்த காலத்தில் முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். பணியிடத்தில் தைரியத்துடன் நடந்து கொள்ளுங்கள்

5 /13

சிம்ம ராசிக்காரர்களின் மிகவும் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது அதிகப்படியான கவனம் தேவை. விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் சூழல் ஏற்படும். 

6 /13

புதன் பெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. பணியிடத்தில் வெற்றி பெற அதிகப்படியான உழைப்பு தேவைப்படும். மேலதிகாரியை திருப்தி படுத்துவது அத்தனை சுலபமாக இருக்காது. நீங்கள் எடுக்கும் பணிகளில் வெற்றி பெறுவதற்கு பலவித இன்னல்களை சந்திக்க நேரிடலாம்

7 /13

புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். பணியிடத்தை ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சில சிக்கல்கள் வரலாம். அதனால் மனச்சோர்வும் ஏற்படலாம். இலக்குகளை அடைவதில் சவால்களை எதிர்கொள்ளலாம்.

8 /13

புதன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சவால்களை முன்வைக்கும். பங்குச்சந்தை போன்ற முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டும். திருமண உறவுகளில் சிக்கல்கள் வரலாம். வாழ்க்கை துணையுடன் புரிதலை அதிகப்படுத்துவது நல்லது

9 /13

பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். இந்த காலத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். மற்றவர்களிடம் பேசும் போது அமைதியாக பேசுவது நல்லது. நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது

10 /13

புதன் பயிற்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். லாபகரமான காலமாக இது இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்

11 /13

கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்பொழுது கிடைக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது நல்ல வேலை கிடைக்கும்

12 /13

மீன ராசியினருக்கு புதன் பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். பேச்சில் அதிகப்படியான கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை