IPL 2025: இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று வீரர்கள் வரும்பட்சத்தில் நிச்சயம் அவர்கள் தலா ரூ. 20 கோடிக்கு மேல் ஏலம் போக அதிக வாய்ப்பிருக்கிறது. அவர்கள் குறித்து இதில் காணலாம்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. ஒரு அணிக்கு கேப்டன்ஸி தெரிந்த வீரர் தேவைப்படலாம், ஒரு அணிக்கு அதிரடி பினிஷிங் பேட்டர் தேவைப்படலாம், ஒரு அணிக்கு மிஸ்ட்ரி ஸ்பின்னர் தேவைப்படலாம், ஒரு அணி தனது ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றலாம். இவை அனைத்தையும் அந்த அணிகள் மெகா ஏலத்தில் மூலம்தான் கட்டமைப்பார்கள். 4, 5 வீரர்களை சுற்றி தங்களின் ஒட்டுமொத்த அணியையும் இந்த மெகா ஏலம் மூலம் அனைத்து அணிகளும் கட்டமைக்கும்.

 
 
1 /8

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, எங்கு நடைபெறுகிறது; கடந்த 2022 மெகா ஏலத்திற்கும் இந்த மெகா ஏலத்திற்கு என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது; விதிகளில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.   

2 /8

இந்த சமயத்தில் பல பரபரப்பு தகவல்களும் வெளியாகி வருகின்றன. ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர்களுக்கு இரண்டு RTM கார்டுகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.   

3 /8

இதன்படி பார்த்தால், சுமார் 6 பேரை ஒரு அணி தக்கவைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த விதி நடைமுறைக்கு வரும்பட்சத்தில் வரும் சீசனில் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் எனலாம்.   

4 /8

இருந்தாலும், சில முக்கிய வீரர்கள் அவர்களின் அணிகளால் விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு வருவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் டிரேட் செய்யப்படலாம் அல்லது ஏலத்திற்கு விடப்பட்டு RTM மூலம் கூட மீண்டும் தக்கவைத்துக்கள்ளப்படலாம். 

5 /8

அந்த வகையில், இந்த மூன்று வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்திற்குள் வரும்பட்சத்தில் நிச்சயம் ரூ. 20 கோடியை தாண்டி ஏலம் போவார்கள். இவர்களை எடுக்க மற்ற அணிகள் முட்டிமோதும்.   

6 /8

டிராவிஸ் ஹெட்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடந்த சீசனல் சிறப்பாக விளையாடிய ஹெட்டை நிச்சயம் அந்த அணி ஏலத்திற்குள் விடாது. அமெரிக்காவில் நடைபெற்ற MLC தொடரிலும் கூட ஹெட் சிறப்பாக விளையாடி அவரின் வாஷிங்டன் ஃபீரிடம் சாம்பியன் பட்டம் வெல்ல வழிவகை செய்தார். ஒருவேளை, பாட் கம்மின்ஸ், கிளாசன் ஆகியோரை மட்டுமே தக்கவைக்க முடிந்தால் இவரை ஏலத்திற்கு விட்டு RTM மூலம் எடுத்துக்கொள்ள முயற்சிக்கும். நிச்சயம் இவருக்கு ஏலத்திற்கு பல அணிகள் அடித்துக்கொள்ளும்.   

7 /8

ஹென்ரிச் கிளாசன்: டிராவிஸ் ஹெட்டை தக்கவைப்பதா அல்லது ஹென்ரிச் கிளாசனை தக்கவைப்பதா என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிச்சயம் குழப்பம் அடையும். அந்த வகையில், கிளாசனை ஒருவேளை ஏலத்தில் விட்டால் இவரை எடுக்க 10 அணிகளும் முட்டிமோதும். எனவே இவரும் ரூ.20 கோடிக்கும் மேல் செல்வார். RTM மூலம் சன்ரைசர்ஸ் நிச்சயம் தக்கவைக்கும்.  

8 /8

ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. இருப்பினும் கடந்த முறை கேப்டன்ஸியில் இருந்து கீழிறக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பும்ரா என மூன்று இந்தியர்களை தக்கவைக்க வேண்டும் என்பதால் ரோஹித் சர்மாவை ஏலத்திற்கு விட்டு அவரை RTM மூலம் எடுத்துக்கொள்ள மும்பை இந்தியன்ஸ் நினைக்கலாம் அல்லது  அவர் விரும்பாதபட்சத்தில் மற்ற அணிகளும் ரூ. 20 கோடிக்கும் மேல் சென்று அவரை எடுக்கலாம்.