ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 1 ஜனவரி 2021 முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 1 ஜனவரி 2021 முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபரின் மகளுக்கு உலகின் முதல் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி 1 ஜனவரி 2021 முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும். இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபரின் மகளுக்கு உலகின் முதல் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டது.
TAS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவின் கூற்றுப்படி, நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் கமலாயா மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கிய கோவிட் 19 க்கான தடுப்பூசி (Covid Vaccine) முதலில் மருத்துவ குழு மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
அவரைப் பொறுத்தவரை, பொது மக்களிடையே ஒரு கட்டமாக இதைப் பயன்படுத்தத் தொடங்குவோம். இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதாவது மருத்துவ பணியாளர்கள், குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதலில் வழங்கப்படும் எனக் கூறினார்.
கமாலய ஆராய்ச்சி மைய நிறுவனம் மற்றும் மருந்து நிறுவனமான பின்னோபார்ம் ஜே.எஸ்.சி. என்ற இரண்டு இடங்களும் தடுப்பூசி (Corona Vaccine) உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சர் கூறினார்.
கமலயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக நாடுகளின் ஆர்வத்தை நாங்கள் கண்டோம். 20 நாடுகளில் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி வாங்குவதற்கான ஆரம்ப கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம்.
ரஷ்யா (Russia) நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிக் கூறுகையில், தடுப்பூசி சப்ளிமெண்ட்ஸிற்காக 20 நாடுகள் சுமார் 100 கோடி அளவிற்கு தடுப்பூசி வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன் கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவும் 500 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளின் உற்பத்தியை உறுதிப்படுத்த தயாராக உள்ளது. TAS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ரஷ்யா தனது உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.