பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது... திடீர் Logout - என்ன பிரச்னை?

Facebook Instagram Outage: உலகம் முழுவதும் மெட்டா நிறுவனத்தின் முக்கிய தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம். 

 

 

 

1 /7

சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்று உலகம் முழுவதும் முடங்கி உள்ளது.  

2 /7

பேஸ்புக் இணையதளம், செயலி, அதன் Messenger செயலி, இன்ஸ்டாகிராம் செயலி, சமீபத்தில் X தளம் போன்று மெட்டா அறிமுகப்படுத்திய Threads செயலி ஆகியவை முடங்கியிருப்பதாகவும் தெரிகிறது.   

3 /7

மேலும், பேஸ்புக் பயனர்கள் தங்களின் கணக்கு தானகவே Logout ஆகிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். "session expired, please log in again" என்று திரையில் காட்டப்படுவதாக தெரிவிக்கின்றனர். 

4 /7

மேலும், மீண்டும் லாக்-இன் செய்ய முயற்சித்தாலும் பேஸ்புக் கணக்கை லாக்-இன் செய்ய முடியவில்லை என தெரிகிறது.   

5 /7

அதாவது, லாக்-இன் செய்ய பாஸ்வேர்டை உள்ளீடு செய்தாலும், பாஸ்வேர்டு தவறு என்றே காட்டுவதாக பயனர்கள் கூறுகின்றனர்.  

6 /7

இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு மேல் இந்த பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது.   

7 /7

இதை தொடர்ந்து, X (Twitter) தளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக மெட்டா தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, மெட்டா சிஇஓ மார்க் சக்கர்பெர்க்கை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.