மக்களே ரூ. 2000 நோட்டை சீக்கிரம் மாத்திருங்க... நெருங்கும் கடைசி தேதி!

2000 Rupees Note Latest News: இன்னும், 11 நாள்களில் அதாவது செப். 30ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பாக அறிவித்தது. 

 

பல இடங்களில் தற்போது ரூ. 2000 நோட்டுகள் வாங்க மறுப்பார்கள். எனவே, அதனை விரைவாக வங்கிகளில் மாற்றிவிடுங்கள் 

 

 

 

1 /7

2000 ரூபாய் நோட்டுகள் வரும் செப். 30ஆம் தேதிக்கு பின் செல்லாது என கடந்த மே 19ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.   

2 /7

எனவே, செப். 30ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அவகாசமும் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டது. 

3 /7

இதனால், மக்களும் சிடிஎம் மெஷின்களில் 2000 ரூபாய் டெபாசிட் செய்தும், வங்கிகளுக்கு சென்றும் தங்களின் நோட்டுகளை ஒப்படைத்து, சில்லறைகளாக மாற்றிக்கொண்டு வருகின்றனர். 

4 /7

இருப்பினும், அதுவரை வியாபாரிகளும், பெரிய பெரிய கடைகளும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கக் கூடாது என ஆர்பிஐ அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. 

5 /7

அதனால், மக்களும் ஸ்விக்கி, சோமாட்டோ, தங்க நகைக் கடைகள், அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய டெலிவரிகள், கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கி வந்தனர்.

6 /7

கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆர்பிஐ வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், 93 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

7 /7

மேலும், கடைசி நாள் நெருங்குவதால் பல்வேறு இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்ய வாய்ப்பு குறைவு. மேலும், கடைசி நாளை நீட்டிக்க வாய்ப்பில்லை என ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், உடனே உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும்.