மாத்தி யோசி! குப்பைக்கூளத்திலிருந்து உருவான இசைக்கருவி! கழிவிலிருந்து நல்லதோர் வீணை

Instrument Made From Waste: நல்லதோர் வீணை செய்தே அதை புழுதியில் எறிவதுண்டோ? இல்லை, குப்பைக் கூளங்களில் இருந்தும் வீணையை உருவாக்கலாம்! சாதித்துக் காட்டிய போபால் கலைஞர்கள்

மாத்தி யோசித்து சாதித்துக் காட்டிய கலைஞர்கள்! மாசுபடுத்தும் கழிவுப் பொருட்களில் இருந்து, இனிய இசை தரும் வீணையின் மாடலை உருவாக்கிக் காட்டிய 15 கலைஞர்களின் குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன 

1 /5

குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய வீணை இது. 28 அடி நீளம்.. எடை 5 டன் கொண்ட வீணை மாடலை போபாலைச் சேர்ந்த 15 கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

2 /5

இந்த வீணையைத் தயாரிக்க 10 லட்சம் ரூபாய் வரை செலவானது. 6 மாத உழைப்பில், செயின், கேபிள், கியர், என வீணான வாகனங்களின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வீணை இது...

3 /5

குப்பையில் இருந்து மாணிக்கமாக உருவான நல்லதோர் வீணை இது. இதில் இருந்து வீணை இசை வெளிவராவிட்டாலும், கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மேம்படும்.

4 /5

இந்த வீணையுடன் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொது இடத்தில் வைக்கப்படும்.

5 /5

இந்திய கலாச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் இந்த வீணை, கழிவை எப்படி பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தையும் உருவாக்கும்