BEWARE: இந்த விஷயத்தை செய்தால் உங்கள் கணக்கு முடக்கம் Twitter அதிரடி!

தவறான ட்வீட்டுகளுக்கு எதிராக ட்விட்டர் அதிரடி நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகபட்சம்ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தவறுகள் செய்பவர்களின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்படும்.
 

COVID காலங்களில், COVID-19 நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி பற்றி நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. எனவே, கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்முறையை தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க, சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் முடிவு செய்தது. அதன்படி, கோவிட் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களைக் கொண்டிருக்கும் ட்வீட்கள் லேபிளிடப்படும். இந்த முயற்சி மீண்டும் தவறு செய்யாமல் எச்சரிக்கை கொடுப்பதற்காகவே. ஆனால், தவறுகள் தொடர்ந்தால், டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்படும். இத்தகைய தவறான ட்வீட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை (strike system) டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

Also Read | Instagram: 100 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோலி

1 /5

கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்முறையை தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க, சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் முடிவு செய்தது. அதன்படி, கோவிட் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களைக் கொண்டிருக்கும் ட்வீட்களை லேபிளிடப்படும். இந்த முயற்சி மீண்டும் தவறு செய்யாமல் எச்சரிக்கை கொடுப்பதற்காகவே.

2 /5

தவறான ட்வீட்டுகளுக்கு எதிராக டிவிட்டர் Strikes என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட Strikes வாங்கினால், அந்த கணக்கு நிரந்தரமாக மூடப்படும்.

3 /5

"strike system எங்கள் கொள்கைகளைப் பற்றி பொதுமக்களுக்குக் தெரிவிப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களை ட்விட்டரில் மேலும் குறைப்பதற்கும் உதவும். குறிப்பாக எங்கள் விதிகளை மீண்டும் மீண்டும் சரியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது" என்று ட்விட்டர் தனது வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.

4 /5

கோவிட் -19 வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 8,400 க்கும் மேற்பட்ட ட்வீட்களை அகற்றியுள்ளதாகவும், உலகளவில் 11.5 மில்லியன் கணக்குகள் மீது கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. ஒரு strike மட்டுமே வாங்கும் டிவிட்டர் கணக்கு மீது பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கப்படாது என்றாலும், இரண்டு strike வாங்கினால், கணக்கு 12 மணி நேரம் மூடப்படும். மூன்றாவது strike வாங்கினால் அடுத்த 12 மணி நேரத்திற்கு கணக்கு மூடப்படும். 4 strike வாங்கினால் கணக்கு 7 நாட்கள் மூடப்படும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட  strike என்பது கணக்கை நிரந்தரமாக மூடுவதற்கான வழியை அமைத்துக் கொடுக்கும்.

5 /5

ட்விட்டர் முதலில் ஆங்கில மொழி உள்ளடக்கத்துடன் இந்த நடைமுறையைத் தொடங்கும், காலப்போக்கில் மற்ற மொழிகளுக்கும் இது விரிவாக்கப்படும்.