சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்

நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கவழக்கம், மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறையாகும். மேலும் இது ஒரு குணப்படுத்த முடியாத நோயாகும், இது சில மருந்துகளாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே நீங்களும் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த உலர் பழங்களை சாப்பிடலாம்.

பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயில் நீங்கள் பயமின்றி சாப்பிடக்கூடிய அத்தகைய சில உலர் பழங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். 

1 /8

உலர்ந்த மல்பெரியில் குறைந்த சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது மற்றும் மெக்னீசியம், வைட்டமின் பி, இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உலர் பழமாகும்.

2 /8

பிஸ்தா உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைத்திருக்கிறது, இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். அத்தகைய சூழ்நிலையில், பிஸ்தாவின் உதவியுடன் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.  

3 /8

பாதாம் பருப்பை உணவிற்குப் பின் அல்லது காலையில் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். மேலும் இது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.  

4 /8

ஆய்வுகளின்படி, முந்திரி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.  

5 /8

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் உலர்ந்த பாதாமி பழங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அவை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல்களைப் பாதுகாக்க முக்கியமான ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகின்றன.  

6 /8

பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திராட்சை, சர்க்கரை நோய்க்கு மலிவான மருந்து. பல வழிகளில் இதை உங்கள் உணவின் சேர்த்துக் கொள்ளலாம். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.  

7 /8

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உலர்ந்த பிளம்ஸை தினமும் சாப்பிடலாம். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.