ராமர் கோயில் 'பூமி பூஜை'க்குப் பிறகு முதல்' தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு புனித நகரமான அயோத்தி, அகல் விளக்குகளாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியே கோலாகலமாக தீபங்களால் மின்னுகிறது. ஸ்ரீராமரின் பிறந்த ஊரான அயோத்தியின் பிரமாண்டமான தீபத் திருவிழா காட்சிகள் புகைப்படங்களாக….
நவம்பர் 13, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தீபவொளி கொண்ட்டாட்டங்களில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அயோத்தி மாநகருக்கு வந்து ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில் 'ஆரத்தி' நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். 14 வருட வனவாசத்திற்காக சீதா, லட்சுமண சகிதமாக அயோத்தியில் இருந்து கிளம்பிய ராமர், இலங்கையில் ராவணனை வதைத்த பிறகு அயோத்தியிற்கு திரும்பிய போது, ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் செய்ததைக் குறிக்கும் விதமாக மாநில முதலமைச்சர் யோகி `பட்டாபிஷேகம் 'செய்து வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார்.
இந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று தொடங்கிய தீபாவளி கொண்டாடங்கள், Jan Jan Ke Ram அதாவது அனைவருக்குமான ஸ்ரீராமர் என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.