செல்வமகளின் அருளைப் பெற சுலபமான பழக்கவழக்கங்கள்! பணதட்டுப்பாட்டை நீக்கும் வழிபாடு!

Mahalakshmi Devi Daily Prayers : வீட்டில் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவது லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் மட்டுமல்லாது பதினாறு பேறுகளை பெறலாம்.  

Astro Remedies For Wealthy Life : அன்னை லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, எல்லாவகை செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்  

1 /8

வாழ்க்கையை நிம்மதியாக வாழ இறையருள் தேவை. இறையருள் இருந்தால், வாழ்த்தைக்குத் தேவையான வளங்கள் அனைத்தும் தடையறக் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது பணம் என்றாலும், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல, கடவுளின் ஆசியே அனைத்திற்கும் அடிப்படையாகிறது  

2 /8

இறையருள் பெறவும், நிம்மதியாய் வாழவும் தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புரிதல் ஆளுக்கு ஆள், வாழும் விதம் என பல விஷயங்களின் அடிப்படையில் மாறுபடும். இருப்பினும், சில பொதுவான வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்...

3 /8

வீட்டில் தொடர்ந்து செல்வமும், நிம்மதியும் வந்து சேர்வதற்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் தேவை. வருமானத் தடைகள் நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வ மழை பொழிய செய்யக்கூடிய எளிய பரிகாரங்களைத் தெரிந்துக் கொள்வோம்

4 /8

பிரம்ம முகூர்த்தத்தில் விடியலில் எழுபவர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும், காலையி எழுந்ததும், விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நாளடைவில் வந்து சேரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாவிட்டாலும், சூரிய உதயம் ஆன பிறகாவது எழுந்து விளக்கேற்ற வேண்டும்

5 /8

காலையில் எழுந்தவுடன், வாசல் கூட்டி பெருக்கி, கோலம் போட்டுவிட்டு, பூஜை அறையில் அன்னை லட்சுமியின் முன் பணத்தை வைத்து வணங்க வேண்டும்

6 /8

பணத்துடன், மணம் தரும் மல்லிகைப்பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.  

7 /8

மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக விளக்கேற்றி வழிபட வேண்டும். இது, அன்னை லட்சுமியின் அருளைத் தரும் சுலபமான வழிபாடு... தடையின்றி தனம் பெற எளிமையான வழிபாடு...

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது