Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஏழாம் நாளான இன்று (செப். 30) நிலவரப்படி, இந்தியா வென்றுள்ள பதக்கங்களை இங்கு காணலாம்.
Asian Games 2023 Medal Tally Day 7: சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் தொடர்ந்து பல போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பதை காணலாம்.
டென்னிஸில் தங்கம்: டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் போப்பண்ணா - ருதுஜா போசலே சீன தைபே அணியை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றினர். இது நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் டென்னிஸில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் ஆகும்.
10ஆவது தங்கம்: ஸ்குவாஷ் விளையாட்டின் ஆடவர் பிரிவின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கத்தை கைப்பற்றியது. இது இந்த தொடரில் இந்தியாவின் 10ஆவது தங்கமாகும்.
கிடைத்தது வெள்ளி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - திவ்யா தடிகோல், சீனா அணியிடம் 14-16 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளியை உறுதி செய்தனர்.
ஓட்டப்பந்தயத்தில் 2 பதக்கம்: ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் கார்த்திக் குமார் மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.
முதலிடத்தில் யார்?: பதக்கப்பட்டியலில் 111 தங்கம், 66 வெள்ளி, 33 வெண்கலம் என 210 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.
2ஆவது மற்றும் 3ஆவது?: ஜப்பான் 28 தங்கம், 38 வெள்ளி, 38 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 2ஆவது இடத்திலும், கொரியா 27 தங்கம், 29 வெள்ளி, 53 வெண்கலம் என 109 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன.
பதக்கப்பட்டியலில் இந்தியா: இந்திய அணி இன்று நான்காம் இடத்தில் நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, இந்தியா 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் 38 என பதக்கங்களை பெற்றுள்ளது.