அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி உறவினர்கள் முன்னிலையில், திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது.
நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கீர்த்தி பாண்டியனை ஏன் அசோக் செல்வன் திருமணம் செய்து கொண்டார்.. கீர்த்தி பாண்டியன் கருப்பாக இருக்கிறார் என்று சிலர் கிண்டலடித்து வந்தனர்.
இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இது சம்பந்தமாக சில மீம்களும் இணையத்தில் வட்டமடித்து வந்தது.
இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக அசோக் செல்வன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "With the most beautiful woman in the world" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.
அசோக் செல்வனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.