Arctic sea: ஆர்க்டிக் கடல் உறைந்ததால், கடலில் சிக்கி தவிக்கும் 18 கப்பல்கள்

உலகின் பெரும்பாலான ஏற்றுமதிகள் கடல் வழிகள் மூலம் நடைபெறும் வர்த்தகத்தை சார்ந்துள்ளது. இதனால், கடல் போக்குவரத்தில் சிறு தடை ஏற்பட்டாலும் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா அருகே 18 சரக்குக் கப்பல்கள் சிக்கிக்கொண்டதால், அதனை மீட்க பெரிய அளவில் நாடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 /5

ரஷ்யாவின் கரையோரத்தில் ஆர்க்டிக் கடலில் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே கடல் உறைந்ததால் சுமார் 18 சரக்குக் கப்பல்கள் அங்கேயே சிக்கிக்கொண்டன.

2 /5

30 செமீ தடிமன் கொண்ட பனிக்கட்டிகள் உருவானதால் பெரும்பாலான கப்பல்கள் லாப்டேவ் கடல் மற்றும் கிழக்கு சைபீரியன் கடல்களில் சிக்கித் தவிக்கின்றன என மாஸ்கோ டைம்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கிடையில், நிலைமையைக் கையாள ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

3 /5

சில கப்பல்கள் பல நாட்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கப்பலில் உள்ளவர்களுக்காகு உணவு,  குடிநீர், மருந்துகள் போன்றவை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஷ்யா தற்போது இரண்டு எண்ணெய் டேங்கர்கள் மற்றும் சரக்கு படகுகள் உட்பட பனிக்கட்டிகளை உடைக்கும் இரண்டு சிறப்பு கப்பல்களையும் அனுப்பியுள்ளது. மோசமான வானிலையால், பாதையை சீரமைக்கும் பணிக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதால், போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

4 /5

இந்தக் கடலின் உறைபனி எப்போதும் ஏற்படுவது தான் என்றாலும், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே, எதிர்பாராத  வகையில் ஏற்பட்ட உறைபனி காரணமாக, இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தக் கப்பல்களில் கோடிக்கணக்கான பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

5 /5

கடல் வழித்தடத்தில் எதிர்பாராதவிதமாக கடல் உறைந்துள்ளதால், இதனால், பெரும் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை சீரமைக்கும் பணி மேலும் வேகமெடுக்கவில்லை என்றால், இந்த கப்பல்கள் பல மாதங்கள் சிக்கித் தவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.