நீங்கள் பார்த்திராத.. ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு அழகான திருமண புகைப்படங்கள்!

AR Rahman Saira Banu Wedding Photos: ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமண புகைப்படங்களை பாருங்கள்.

AR Rahman Saira Banu Latest News: இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருப்பது, அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

1 /10

29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவரை பிரிவதாக அறிவித்த அவரது மனைவி சாயிரா பானு.

2 /10

ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

3 /10

திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டு உள்ளது.

4 /10

ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வில் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது என்பதை அறிந்துக்கொண்டார். 

5 /10

இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் அவர்களை இணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார். 

6 /10

இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார். 

7 /10

ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

8 /10

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

9 /10

அழகான ஜோடி எனக் கொண்டாடப்பட்ட இவர்களின் திருமண வாழ்வு 29 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வருவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு.

10 /10

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதியருக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.