Guru Vakri / Shukra Margi, Impact on Zodiac Signs: ஜோதிட கணக்கீடுகளின் படி செப்டம்பர் 4 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில், குரு பகவான் வக்ர பெயர்ச்சியும், சுக்கிரன் வக்ர நிவர்த்தியும் அடையவுள்ளனர்.
ஜோதிடத்தில் குரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக உள்ளார். ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால், வாழ்க்கையில் அறிவு, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சுக்கிரனுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. அவர் பேச்சாற்றல், புத்திக்கூர்மை, வணிகம் ஆகியவற்றின் காரணியாக பார்க்கப்படுகிறார். குருவின் வக்ர பெயர்ச்சி மற்றும் சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
குரு வக்ர பெயர்ச்சி: குரு பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 7:39 -க்கு வக்ர பெயர்ச்சி அடைவார். 118 நாட்களுக்கு பிறகு, அவர் வக்ர நிவர்த்தி அடைவார். குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் சுமார் 4 மாதங்களுக்கு அதிக பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
கடகம்: குருவின் வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.வேலையில் வெற்றியும், தொழிலில் வளர்ச்சியும் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.வேலை செய்பவர்களுக்கும் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வணிக வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள், முதலீட்டிலும் லாபம் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் குரு வக்ர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறலாம். வருமானம் பெருகவும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. தேர்வுக்கு தயாராகும் நபர்கள் வெற்றி பெறலாம். இதனுடன் பொருளாதார நிலையும் வலுப்பெறும். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். வியாபாரத்தில் இருந்த தடைகளிலிருந்தும் விடுபடலாம். வருமானம் கூடும். செல்வச் செழிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் உருவாகும். வேலையில் வெற்றி பெறலாம். முதலீடு பலனளிக்கும். நிதி நிலையும் வலுப்பெறலாம். மேலும் அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெறலாம். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்: குருவின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்கி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறுவார்கள். வேலை வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பிள்ளைகள் சம்பந்தமான எந்த நல்ல செய்தியும் கிடைக்கும்.
தனுசு: குரு வக்ர பெயர்ச்சியால் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நிலம், சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். குருவின் அருளால் செல்வம் பெருகும், பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய கார், புதிய வீடு அல்லது மனை வாங்கலாம். காதல் விவகாரங்களில் வெற்றி பெறலாம்.
சுக்கிரன் வக்ர நிவர்த்தி: சுக்கிரன் செப்டம்பர் 4 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
விருச்சிகம்: சுக்கிரன் வக்ர நிவர்த்தி இவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தடைப்பட்ட வேலைகளை முடிவடையும். பயண வாய்ப்புகள் உண்டு. இந்தக் காலகட்டம் மாணவர்களுக்கு சாதகமாக அமையும்.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபம்: சுக்கிரனின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு சுபமாக அமையும். இந்த நேரத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவுகள் சுமூகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வெளியூர் பயணம் செய்யலாம், அது நன்மை பயக்கும். தைரியமும் கூடும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைய முடியும்.
மிதுனம்: நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் வேலையில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத நிதி ஆதாயம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், உங்கள் வார்த்தைகளால் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். வருமானம் கூடும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை பந்தயம் மற்றும் லாட்டரி மூலம் நீங்கள் பணம் பெறலாம்.
கன்னி: சுக்கிரன் வக்ர நிவர்த்தி உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.தடைபட்ட வேலைகள் முடியும், பழைய முதலீடுகள் லாபம் தரும். உங்கள் துணையின் அன்பைப் பெறுவீர்கள். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். அவை நன்மை பயக்கும். வசதிகள் பெருகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. நீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.